வணக்கமும் வரவேற்பும்
தாய் வாழ்க!
தாய் கொடுத்த தமிழ் வாழ்க!
இன்பமே சூழ்க!
எல்லாரும் வாழ்க!
அனைவருக்கும் வணக்கம், வளங்கள் சூழ நல்வாழ்த்து!
பேரா மாநிலம், தாப்பா தொகுதி ம.இ.கா மகளிர் பகுதி,
பத்தாங் பாடாங் இந்திய மகளிர் முன்னேற்ற இயக்கம்
நன்றி, வணக்கம்.
"புதுமைப் பெண்களாய் புவியில் புதுமைகள் படைப்போம்"
அன்புடன்,
திருமதி.பிரேமா ஸ்ரீதரன்,
தலைவி, தாப்பா தொகுதி ம.இ.கா. மகளிர் பகுதி.
தலைவி, பத்தாங் பாடாங் இந்திய மகளிர் முன்னேற்ற இயக்கம்.
தாய் கொடுத்த தமிழ் வாழ்க!
இன்பமே சூழ்க!
எல்லாரும் வாழ்க!
அனைவருக்கும் வணக்கம், வளங்கள் சூழ நல்வாழ்த்து!
பேரா மாநிலம், தாப்பா தொகுதி ம.இ.கா மகளிர் பகுதி,
பத்தாங் பாடாங் இந்திய மகளிர் முன்னேற்ற இயக்கம்
ஆகிய இரண்டு மகளிர் இயக்கங்களின் சார்பில் 'மகளிர் மன்றில்' என்னும் இந்த வலைப்பதிவின் வழியாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விரு இயக்கங்களின் அதிகாரப்படியான இணைய ஊடகமாக இந்த 'மகளிர் மன்றில்' வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நமது நிகழ்ச்சிகள், செய்திகள், அறிவிப்புகள், கருத்துகள், கலந்துரையாடல்கள் ஆகிய அனைத்தும் இனிமேல் இந்த 'மகளிர் மன்றில்' வழியாக வழங்கப்படும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப நமது மகளிர் அணியின் செயற்பாடுகள் புதுமைப்பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, நமது மகளின் அணி உறுப்பினர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்திகளை உடனடியாகப் பகிர்ந்துகொள்ளவும் நமது நடவடிக்கைகள் - நிகழ்ச்சிகள் பற்றி அனைவருக்கும் அறிவிப்பதற்கும் இந்த வலைப்பதிவு பயனாக இருக்கும்.
இந்த அறிமுகத்தோடு, 'மகளிர் மன்றில்' இணைய வலைப்பதிவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
"புதுமைப் பெண்களாய் புவியில் புதுமைகள் படைப்போம்"
அன்புடன்,
திருமதி.பிரேமா ஸ்ரீதரன்,
தலைவி, தாப்பா தொகுதி ம.இ.கா. மகளிர் பகுதி.
தலைவி, பத்தாங் பாடாங் இந்திய மகளிர் முன்னேற்ற இயக்கம்.
Subscribe to:
Comments (Atom)